வணிகம்
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
வணிகம்

சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
30 Oct 2024 6:01 PM IST

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 126 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 340 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 513 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 807 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

426 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 942 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 320 புள்ளிகள் சரிவடைந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 37 என்ற புள்ளிகளிலும், 75 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 448 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

619 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 50 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை நேற்று உயர்ந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்