< Back
வணிகம்
சற்று உயர்வுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை

File image

வணிகம்

சற்று உயர்வுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
29 Nov 2024 5:44 PM IST

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, 216.95 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 131.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 148.75 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 055.60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 759.05 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 802.79 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 90.55 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 010.15 புள்ளிகளில் நிறைவடைந்தது. 65.75 புள்ளிகள் உயர்ந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 619.50 புள்ளிகளிலும், 205.51 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 298.07 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை அதிக லாபத்தில் கைமாறின. அதேபோல, பவர் கிரிட், நெஸ்லே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இன்போசிஸ் ஆகியவை பின்தங்கின.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலானவை உயர்வுடன் முடிவடைந்தன, அதானி கிரீன் எனர்ஜி 21.72 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 15.56 சதவீதமும் பிஎஸ்இயில் உயர்ந்தன.

ஆசிய சந்தைகளில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டன, சியோல் மற்றும் டோக்கியோ சரிவில் வர்த்தகம் செய்யப்பட்டன. ஐரோப்பிய சந்தைகள் சரிவில் வர்த்தகமானது. நேற்று அமெரிக்க சந்தைகள் நன்றி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.11,756.25 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று சென்செக்ஸ் 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 இல் நிலைத்தது. நிப்டி 360.75 புள்ளிகள் உயர்ந்து சரிந்து 23,914.15 இருந்தது.

மேலும் செய்திகள்