வணிகம்
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
29 Oct 2024 9:40 PM IST

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த ஒருவாரத்திற்கு மேலாக தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றமடைந்துள்ளது.

அதன்படி, 127 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 466 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,061 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 320 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

363 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 369 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 495 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 24 ஆயிரத்து 357 என்ற புள்ளிகளிலும், 124 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 524 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

1,284 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 669 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்