சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
|ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை சந்தித்து வருகிறது. செக்செக்ஸ் இன்று காலை 80,281.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1.07 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 961.73 புள்ளிகள் குறைந்து 79,272.34 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 281.90 புள்ளிகள் சரிந்து 23,993.00 புள்ளிகளில் உள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், ஐடிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை லாபத்தில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல, டெக் மஹிந்திரா, இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டன, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
முன்னதாக, நேற்று சென்செக்ஸ் 230.02 புள்ளிகள் உயர்ந்து 80,234.08 இல் நிலைத்தது. நிப்டி 80.40 புள்ளிகள் உயர்ந்து 24,274.90 ஆக இருந்தது.