< Back
வணிகம்
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்
வணிகம்

சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்

தினத்தந்தி
|
26 Nov 2024 4:16 PM IST

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், மாலை வர்த்தக இறுதியில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

அதன்படி, 27 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 194 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 16 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 191 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

105 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 4 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 11 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 46 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

6 புள்ளிகள் சரிந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 569 புள்ளிகளிலும், 72 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 432 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தை இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்