ஏற்றத்துடன் நிறைவடைந்த பேங்க் நிப்டி : இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
|பேங்க் நிப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் இன்று பேங்க் நிப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 184 ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 363 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 57 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 257 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 123 ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 78 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 453 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 241 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 339 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 8 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 91 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாத இறுதி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.