< Back
வணிகம்
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
வணிகம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

தினத்தந்தி
|
14 Nov 2024 4:43 PM IST

இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 26.35 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 532.70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 91.20 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 179.55 புள்ளிகளில் நிறைவடைந்தது.

110.64 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 580.31 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல, 61.90 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 200.30 புள்ளிகளிலும், 29 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 100.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, நெஸ்லே, இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை லாபத்தில் கைமாறின.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 2,502.58 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 6,145.24 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என்று பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய சந்தைகளில், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் குறைவாக நிலைபெற்றன, சியோல் நேர்மறையான பிரதேசத்தில் முடிந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளான டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது என்றாலும், சியோல் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்வில் நிறைவடைந்தன. அமெரிக்க பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்தோடு நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்