கடும் சரிவில் இருந்து அதிரடியாக மீண்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
|இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவில் இருந்து அதிரடியாக மீண்டது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவில் இருந்து அதிரடியாக மீண்டது. அதன்படி, காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் சரிந்தது. நிப்டி, பேங்க் நிப்டி, மிட்கேப் நிப்டி உள்பட அனைத்து குறியீடுகளும் கடும் சரிவை சந்தித்தது.
அதன்பின்னர், காலை 10 மணி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து அதிரடியாக மீளத்தொடங்கியது. வர்த்தக இறுதியில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
அதன்படி, 219 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 768 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 367 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 583 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
843 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 133 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 153 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 880 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
63 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 134 புள்ளிகளிலும், 490 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 997 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
காலை வர்த்தகம் தொடங்கிய உடன் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில் பின்னர் சரிவில் இருந்து பங்குச்சந்தை மீண்டதையடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.