< Back
வணிகம்
2 நாட்கள் ஏற்றத்திற்கு பிறகு சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
வணிகம்

2 நாட்கள் ஏற்றத்திற்கு பிறகு சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
7 Nov 2024 12:02 PM IST

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தமாகி வருகிறது.

மும்பை,

கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தமாக இந்திய பங்குச்சந்தை அமெரிக்க அதிபர் தேர்தலால் கடந்த 2 நாட்களாக ஏற்றத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறாது.

அதன்படி, 109.1 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 374.95 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, 237.93 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 140.20 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பஜாஜ் பின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் நெஸ்லே ஆகியவை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் ஆகிய நிறுவனங்களும் லாபத்தை ஈட்டின.

டாடா ஸ்டீஸ் நிறுவனம் செப்டம்பர் 2024 காலாண்டில் ரூ.758.84 கோடி நிகர லாபம் ஈட்டியதை அடுத்து, அந்நிறுவன பங்குகள் 1 சதவீதம் உயர்ந்தது. ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் டோக்கியோ பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் செய்திகள்