வணிகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
வணிகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
6 Nov 2024 4:48 PM IST

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடைவடைந்தது.

மும்பை,

கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தமாக இந்திய பங்குச்சந்தை இன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை அடுத்து, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, 270.75 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 484.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 110.15 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 317.40 புள்ளிகளில் நிறைவடைந்தது.

901.50 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 378.13 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 52.30 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 24 ஆயிரத்து 181.20 என்ற புள்ளிகளிலும், 283.10 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 654.95 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்போசிஸ் லிமிடெட், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்.சி.எல்.டெக், லார்சன் அண்ட் டூப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை லாபத்தில் கைமாறின. மேலும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்