< Back
வணிகம்
உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
வணிகம்

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

தினத்தந்தி
|
5 Dec 2024 5:37 PM IST

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 240.95 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 708.40 புள்ளிகளில் நிறைவடைந்தது. 809.53 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 765.86 புள்ளிகளில் நிறைவடைந்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபத்தில் கைமாறின. என்டிபிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பின்தங்கின.

ஆசிய சந்தைகளில், டோக்கியோ மற்றும் ஷாங்காய் உயர்வுடன் நிலைபெற்றன, சியோல் மற்றும் ஹாங்காங் குறைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.. ஐரோப்பிய சந்தைகள் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின. நேற்று அமெரிக்க சந்தைகள் சாதகமாக முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,797.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்