< Back
வணிகம்
ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
வணிகம்

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

தினத்தந்தி
|
1 Jan 2025 11:12 AM IST

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை உடனடியாக சரிவில் இருந்து மீண்டும் ஏற்றம் பெற்றது.

அதன்படி, நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 746 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 262 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 115 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 378 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 78 ஆயிரத்து 505 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

129 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 640 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 300 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 44 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 21 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 887 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்