தங்கம்
தங்கம்
ஆண்டின் இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
|31 Dec 2024 10:40 AM IST
2024 ஆண்டின் இறுதி நாளில் தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2024 ஆண்டின் இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.7,110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கு விற்கப்படுகிறது.