< Back
தங்கம்
தங்கம்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...?
|12 Dec 2024 10:33 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் இன்று மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.