தங்கம்
சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
தங்கம்

சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

தினத்தந்தி
|
8 Nov 2024 10:30 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வந்தது. இதனால் 2 நாள் இடைவெளியிலேயே அதாவது, கடந்த மாதம் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரம் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்