தங்கம்
மாத தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
தங்கம்

மாத தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

தினத்தந்தி
|
1 Oct 2024 10:36 AM IST

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 24-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்