தங்கம்
தங்கம்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
|18 Nov 2024 9:59 AM IST
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.