தங்கம்
ஒரு வாரத்திற்குப்பின் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம்

ஒரு வாரத்திற்குப்பின் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

தினத்தந்தி
|
25 Nov 2024 10:32 AM IST

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வார விடுமுறை என்பதால், விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2,920 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்