< Back
வணிகம்
தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்

வணிகம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தினத்தந்தி
|
5 March 2025 10:12 AM IST

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த பிப்.11ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை, சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையை தாண்டியது. இந்த சூழலில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும், சவரனுக்கு ரூ.63,000 என்ற விலைக்கு குறையாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 4-ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 5-ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,065க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்