< Back
வணிகம்
வணிகம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
|4 Dec 2024 7:01 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை காண்போம்.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 13 பைசா உயர்ந்து ரூ. 100.93க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 13 பைசா உயர்ந்து ரூ. 92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.