< Back
உலக செய்திகள்
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை
உலக செய்திகள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
23 Oct 2024 7:20 PM IST

இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

கொழும்பு

இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை பற்றி குறிப்பிடவில்லை.

இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தேசிய கவுன்சில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்