< Back
மாநில செய்திகள்
புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
29 Nov 2024 5:52 PM IST

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையினை அறிவித்து வருகிறனர்.

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்;

1. கடலூர்

2 விழுப்புரம்

3 கள்ளக்குறிச்சி

4. காஞ்சிபுரம்

5. திருவள்ளூர்

6. சென்னை

7. செங்கல்பட்டு

8. மயிலாடுதுறை

9. ராணிப்பேட்டை

ஏற்கெனவே புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்