< Back
மாநில செய்திகள்
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா - தங்கம் தென்னரசு
மாநில செய்திகள்

5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா - தங்கம் தென்னரசு

தினத்தந்தி
|
14 March 2025 11:30 AM IST

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

சென்னை மாநகர் மற்றும் அதன் சூழ்பகுதிகளில், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும், அதேபோன்று மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன். சொந்த வீடற்ற / நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதுவரை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 இலட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றார்.

மேலும் முதற்கட்டமாக. மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர. மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்