< Back
மாநில செய்திகள்
மிக கனமழை எச்சரிக்கை: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மாநில செய்திகள்

மிக கனமழை எச்சரிக்கை: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினத்தந்தி
|
14 Oct 2024 1:13 PM IST

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.

இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை முதல் 18ம் தேதி வரை ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (work from home)அறிவுறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்