< Back
மாநில செய்திகள்
கனமழை: எந்தெந்த  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
மாநில செய்திகள்

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தினத்தந்தி
|
12 Dec 2024 5:54 AM IST

பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.

சென்னை,

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தநிலையில், தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

  • சென்னை
  • விழுப்புரம்,
  • தஞ்சை,
  • மயிலாடுதுறை
  • புதுக்கோட்டை,
  • கடலூர்,
  • ராமநாதபுரம்,
  • திண்டுக்கல்,
  • காஞ்சிபுரம்,
  • திருவாரூர்
  • செங்கல்பட்டு
  • நெல்லை ( 1 - 5 ஆம் வகுப்பு வரை மட்டும்)
  • ராணிப்பேட்டை
  • கரூர்
  • திருவண்ணாமலை (கல்லூரிகளுக்கும் விடுமுறை)
  • வேலூர்
  • தூத்துக்குடி
  • திருப்பத்தூர்
  • சேலம்
  • பெரம்பலூர்

புதுச்சேரியில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்