< Back
மாநில செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
மாநில செய்திகள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

தினத்தந்தி
|
8 Nov 2024 9:21 PM IST

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் தற்போது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார்.

மேலும் செய்திகள்