ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
|அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ 16,800 வரை போனஸ் கிடைக்கும்.
அது போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக ரூ 7 ஆயிரம் வரை போனஸ் பெறுவார்கள். முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.