< Back
மாத ராசிபலன்
September month Rasipalan
மாத ராசிபலன்

செப்டம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

தினத்தந்தி
|
31 Aug 2024 8:20 PM IST

சிம்மம், கன்னி, துலாம், மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே.. உங்கள் பேச்சு மற்றவர்களை சிந்திக்க வைக்கும் நிலையில் இருக்கும். பாமரருக்கும் புரியும் விதத்தில் பேசுபவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். எனவே, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

குடும்பத் தலைவிகள் திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கள் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறும். தங்கள் கணவரின் உடல் நிலையில் கவனம் கொள்வது நல்லது. அவரது உடலில் எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் அதிகமான இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களுடன் வெளியூர் படபிடிப்புக்காக செல்வீர்கள். அங்கு நல்ல தொகை கிடைக்கும். உடல் நலம் மிகவும் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் பள்ளி ஆசிரியர் தலைமையில் கல்விச் சுற்றுலா செல்பவர்கள் நீர் நிலைகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். ஆசிரியரின் பேச்சைக் கேட்டு நடப்பது தங்களுக்கு நன்மையை அளிக்கும்.

பரிகாரம்

திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே.. அடுத்தது என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பவர் நீங்கள். அந்த அளவிற்கு பக்குவப்பட்டவர் நீங்கள்தான்.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் உங்கள் சக பணியாளர்களிடம் முன்கோபத்தைக் காட்ட வேண்டாம். மாறாக அவர்களுடன் புன்னகையுடன் செல்வது அனைத்துவிதத்திலும் நல்லது.

வியாபாரிகள் சில்லரை வியாபாரம் மற்றும் மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும்.

குடும்பத்தலைவிகள் தங்கள் வருமானத்தை பெருக்க கைத்தொழில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆதலால், புதிய கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள ஆரம்பீர்கள்.

கலைஞர்கள் சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து முடித்து விடுவீர்கள்.

மாணவர்களுக்கு, பிள்ளைகள் தங்கள் கல்வியில் அலட்சியம் காட்டாமல் இருந்தால் தான் தாங்கள் நினைத்த துறையைப் பெற உதவியாக இருக்கும்.

பரிகாரம்

சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.

துலாம்

துலா ராசி அன்பர்களே.. எந்த கூட்டத்திலும் முக்கியத்துவம் உங்களுக்கு என்றும் உண்டு. எங்கும் உங்களுக்கென ஒரு தனி செல்வாக்கு இருக்கும்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் தங்கள் கீழ் பணி செய்யும் உத்யோகஸ்தர்களிடம் ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் உங்கள் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

வியாபாரிகள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்ப செலவில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து அதில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

கலைஞர்களுக்கு கலைத்துறையில் உள்ளவர்கள் எப்பொழுதும் தங்கள் எதிர்பாலினரிடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. தேவையற்ற கிசுக்கிசுக்கிளில் இருந்து தப்பலாம்.

மாணவர்களுக்கு, மாணவமணிகள் தங்கள் இலக்கை தற்போதிலிருந்தே நிர்ணயித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பின்னால் குழப்பமடையக் கூடும். அதிக மதிப்பெண்கள் பெற புரிந்து படிப்பது நல்லது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே.. உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் உங்கள் எண்ணம் எல்லாம் ஈடேறுவது உறுதி.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகதர்கள் சக ஊழியர்கள் தங்களைப் பற்றி தவறாக பேசினாலும் தங்கள் அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகள் தங்களை தவறாக நம்ப வாய்ப்பில்லை. மாறாக, உத்யோகத்தில் அமைதி நிலவும்.

வியாபாரிகளுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள். தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கும்.

குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மிகவும் அனுசரனையுடனும், இன்முகத்துடனும் பழகுபவர். ஆதலால், தங்களுக்கு எப்பேர்ப்பட்ட பணச்சிக்களையும் சமாளித்து வெற்றி பெறக்கூடியவர்.

கலைஞர்களுக்கு திரைப்படத்துறையில் முன்னேற துடிப்பவர்கள் படத்தில் மட்டும் கவனம் செலுத்தவும். தங்கள் கதாநாயகருடன் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் திறமை வீண்போகாது.

மாணவர்கள் அரசு தேர்வு எழுதுபவர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். இல்லையென்றால் குறைவாக பெற்று எதிர் மாறான பலன்களைத் தரும்.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope

மேலும் செய்திகள்