< Back
மொபைல்
மொபைல்
வியூ பிரீமியம் ஸ்மார்ட் டி.வி.
|6 April 2023 8:09 PM IST
வீட்டு உபயோக மின்னணு சாதனங் களைத் தயாரிக்கும் வியூ நிறுவனம் புதிதாக பிரிமீயம் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
43 அங்குலம் மற்றும் 55 அங்குல அளவுகளில் இது வந்துள்ளது. இனிய இசையை வழங்க 50 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இதில் மூன்று புறம் பிரேம் இல்லாத வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் கூகுள் அசிஸ்டென்ட் மூலம் செயல்படும் குரல்வழி கட்டுப்பாடு வசதியும் கொண்டது. இதில் 64 பிட் குவாட் கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம், வை-பை இணைப்பு வசதி உடையது. 43 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.23,999. 55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.32,999.