< Back
மொபைல்
விவோ டி.டபிள்யூ.எஸ். ஏர் வயர்லெஸ் இயர்போன்
மொபைல்

விவோ டி.டபிள்யூ.எஸ். ஏர் வயர்லெஸ் இயர்போன்

தினத்தந்தி
|
31 March 2023 7:54 PM IST

ஸ்மார்ட்போன் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான விவோ தற்போது டி.டபிள்யூ.எஸ். ஏர் என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது மிகவும் எடை (தலா 3.5 கிராம்) குறைவானது. புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதில் விவோ கோல்டன் அகுயூஸ்டிக் லேப் நுட்பம் உள்ளது.

இதில் மூன்று விதமான தனித்தனியான டியூனிங் வசதி உள்ளது. இதனால் கிளாசிக்கல் இசை முதல் பாப் இசை வரை விருப்பமானதை துல்லியமாகக் கேட்டு மகிழலாம். இது 25 மணி நேரம் செயல்படக் கூடியது. இதில் இரண்டு மைக்ரோபோன் உள்ளது. நீர் புகா தன்மை கொண்டது. சார்ஜிங் கேசின் எடை 38 கிராம். இயர்போனில் 29 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது முழுமை யாக சார்ஜ் செய்யப்பட்டால் 5 மணி நேரம் வரை செயல்படும். சார்ஜிங் கேசில் 25 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரம் சேமித்து வைத்திருக்கும் திறன் கொண்டது. வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் வந்துள்ள இந்த வயர்லெஸ் இயர்போனின் விலை சுமார் ரூ.3,999.

மேலும் செய்திகள்