< Back
மொபைல்
மொபைல்
யு அண்ட் ஐ டவர் பாக்ஸ்
|4 May 2023 9:15 PM IST
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் யு அண்ட் ஐ நிறுவனம் புதிதாக 6 ஆயிரம் வாட் திறன் கொண்ட கரோகி டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. டவர் பாக்ஸ் 2.0 என்ற பெயரில் இது வந்துள்ளது.
இத்துடன் 35 வாட் திறன் கொண்ட விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜரும், 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கும் உள்ளது. வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாம்.
சிறிய அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றிலும் இது பயன்படுத்த ஏற்றது. அழகிய விளக்குகள் (ஆர்.ஜி.பி.) இதில் உள்ளன. இது இசையின் அளவுக்கேற்ப அழகாக ஒளிரும். இதை இயக்க ரிமோட்டும் உள்ளது. புளூடூத் இணைப்பு மூலமும் இதை செயல்படுத்தலாம். மைக்ரோபோனை வயர் மூலம் இணைத்து இதை ஒலி பெருக்கியா கவும் பயன்படுத்த முடியும். பண்பலை வானொலி இணைப்பு உள்ளதால், விருப்பமான பாடல்களைக் கேட்டு மகிழலாம். இதன் விலை சுமார் ரூ.6,999.