< Back
மொபைல்
மொபைல்
கேமோன் 20, 20 புரோ
|8 Jun 2023 8:26 PM IST
டெக்னோ நிறுவனம் கேமோன் 20 மற்றும் கேமோன் 20 புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.14,999 முதல் ஆரம்பமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மேஜிக் ஸ்கின் என்ற புதிய பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட பகுதி உள்ளது. இது பார்ப்பதற்கு அழகான தோற்றத்தையும், உடலில் எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 12 என்.எம். பிராசஸர் உள்ளது.8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண் டது.
பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. 5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. புரோ மாடல் விலை சுமார் ரூ.19,999 முதல் ஆரம்பமாகிறது.