< Back
மொபைல்
மொபைல்
சோனி ஹெட்போன்
|31 March 2023 8:48 PM IST
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சோனி நிறுவனம் தற்போது டபிள்யூ.ஹெச். சி.ஹெச் 720.என். என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் மேம்பட்ட சுற்றுப்புற இரைச்சல் தவிர்ப்பு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சுற்றுப்புற காற்றின் வேக இரைச்சலையும் இது தடுத்துவிடும் நுட்பம் கொண்டது.
இது தொடர்ந்து 35 மணி நேரம் செயல்படக் கூடியது. 3 நிமிடம் சார்ஜ் செய்தாலே ஒரு மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.9,990. கருப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்.