< Back
மொபைல்
ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்
மொபைல்

ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்

தினத்தந்தி
|
9 Aug 2023 8:12 AM GMT

ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி புதிதாக ரெட்மி 12 என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.79 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டது. 128 ஜி.பி., 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் நீலம், ஜேட் கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

4 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.11,999.

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.13,499.

8 ஜி.பி., 256 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.15,499.

மேலும் செய்திகள்