< Back
மொபைல்
ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன்
மொபைல்

ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
31 March 2023 9:16 PM IST

ரியல்மி நிறுவனம் புதிதாக சி 55 என்ற பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலையும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினை வகம் மாடலின் விலை சுமார் ரூ.10,999. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.11,999. 8 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.13,999.

மேலும் செய்திகள்