< Back
மொபைல்
மொபைல்
ரியல்மி சி 51 ஸ்மார்ட்போன் அறிமுகம்
|13 Sept 2023 3:53 PM IST
ரியல்மி நிறுவனம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட்போனை சி 51 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 6.7 அங்குலத்தில் பெரிய திரையைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 2 டி.பி. வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் ஆகிய வசதிகள் இதில் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.
புதினா பச்சை, கார்பன் கருப்பு நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.8,999.