< Back
மொபைல்
பிரைம்புக் 4-ஜி
மொபைல்

பிரைம்புக் 4-ஜி

தினத்தந்தி
|
6 April 2023 5:38 PM IST

பிரைம்புக் நிறுவனம் 4-ஜி லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் விரைவாக செயல்பட உதவும் பிராசஸர் உள்ளது. மீடியாடெக் கோம்பானியோ 500 உள்ளதால் இது விரைவாக செயல்படும். இது 11.6 அங்குல திரையைக் கொண்டது. இதன் எடை 1.2 கி.கி. மட்டுமே. இதில் உள்ள பேட்டரி 10 மணி நேரம் தொடர்ந்து செயல்பட உதவுகிறது. 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி., 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. நினைவகத் திறனை 200 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. உள்ளீடான ஸ்பீக்கர்கள் உள்ளன. குவெர்டி கீ போர்டு உள்ளது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.14,990.

மேலும் செய்திகள்