< Back
மொபைல்
மொபைல்
போனிக்ஸ் அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
|11 May 2023 9:15 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பயர்போல்ட் நிறுவனம் போனிக்ஸ் அல்ட்ரா என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.1,999. அழகிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வந்துள்ளது. 1.39 அங்குல வட்ட வடிவிலான டயலைக் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவிடும் திறன் கொண்டது. ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும்.