< Back
மொபைல்
ஒன் பிளஸ் நார்ட் சி.இ 3 லைட்
மொபைல்

ஒன் பிளஸ் நார்ட் சி.இ 3 லைட்

தினத்தந்தி
|
13 April 2023 5:44 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் சி.இ 3 லைட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.75 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் அட்ரினோ பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டவையாக இது வந்துள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 13 ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சூப்பர்வூக் விரைவாக சார்ஜ் ஆகும் சார்ஜருடன் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.19,999. இதில் 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.21,999.

மேலும் செய்திகள்