நாய்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
|மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் ஸ்கவுட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளுக்கென இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவர்களைக் கவரும் வகையிலான வண்ணத்தில் இது வந்துள்ளது. குழந்தைகள் விரும்பி விளையாடும் வீடியோ விளையாட்டுகளான ஜியோ-பென்சிங் உள்ளிட்ட விளையாட்டுகளும் இதில் உள்ளன. சிம் இணைப்பில் தொடர்பு கொள்ளும் வசதியுடைய இது 1.4 அங்குல திரையைக் கொண்டது.
குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் பல் துலக்குவது, பள்ளியில் அளிக்கும் வீட்டு பாடங்களை செய்து முடிப்பது போன்ற முன்கூட்டிய அறிவுறுத்தல் களை பெற்றோர்கள் இதில் பதிவு செய்ய முடியும். குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு அதுபற்றி அறிவுறுத்தும். குழந்தைகளின் இதய துடிப்பு, அவர்கள் நடந்த தூரம், தூக்க முறை உள்ளிட்டவற்றை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும். கால் குலேட்டர், ஸ்டாப்வாட்ச், காலண்டர் உள்ளிட்டவையும் இதில் உள்ளன. 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
சிம் இணைப்பு உள்ளதால் இருவழி தொடர்பு மேற்கொள்ள முடியும். இதன் எடை 45 கிராம் மட்டுமே. பர்ப்பிள், கருப்பு நிறங்களில் கிடைக்கும்.