< Back
மொபைல்
கேலக்ஸி எப் 34 ஸ்மார்ட்போன் அறிமுகம்
மொபைல்

கேலக்ஸி எப் 34 ஸ்மார்ட்போன் அறிமுகம்

தினத்தந்தி
|
16 Aug 2023 4:34 PM IST

சாம்சங் தயாரிப்புகளில் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில் எப் 34 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் திரை உள்ளது. எளிதில் உடையாத தன்மை கொண்ட கொரில்லா கண்ணாடி 5 பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இது கைகள் அசைந்தாலும் புகைப்படங்களை துல்லிய மாக எடுக்கும் திறன் கொண்டது. இதனால் புகைப்படக் கலைஞர்களுக்கு நிகரான படங்களை இந்த ஸ்மார்ட்போன் மூலம் எடுக்க முடியும். நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.16,999.

மேலும் செய்திகள்