< Back
மொபைல்
மொபைல்
சாம்சங் கேலக்ஸி இஸட் பிலிப் 5 அறிமுகம்
|2 Aug 2023 11:58 AM IST
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் இஸட் பிலிப் 5 என்ற பெயரில் மடக்கும் வகையிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் போனை பயன்படுத்துவதில் புதிய அனுபவத்தை இது அளிக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் செயல்படும் வகையிலான பேட்டரி, மெலிதான வடிவமைப்பு, 6.7 அங்குல அமோலெட் திரை, மடக்கிய பிறகு சிறிய அளவிலான 3.4 அங்குல திரை ஆகியன இதில் உள்ளன. இதன் எடை 253 கிராம் ஆகும். முன்புறம் 10 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.
8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகத்திறன் கொண்ட இதில் ஆண்ட்ராய்டு 123 இயங்குதளம் உள்ளது.
கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.99,999.