< Back
மொபைல்
இன்பினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போன்
மொபைல்

இன்பினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
22 Jun 2023 9:46 AM GMT

இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 30 என்ற பெயரிலான 5-ஜி செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி 6080 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது.

இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல்ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 45 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம், தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

4 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.14,999. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.15,999.

மேலும் செய்திகள்