< Back
மொபைல்
மொபைல்
கூகுள் பிக்ஸெல் 8, பிக்ஸெல் 8 புரோ
|19 Oct 2023 6:01 PM IST
பிக்ஸெல் 8 மற்றும் பிக்ஸெல் 8 புரோ என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இணைய தேடுபொறியில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனத் தயாரிப்புகளில் பிக்ஸெல் ஸ்மார்ட்போன் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தற்போது பிக்ஸெல் 8 மற்றும் பிக்ஸெல் 8 புரோ என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.2 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் ஓலெட் திரையைக் கொண்டது.
புரோ மாடல் 6.7 அங்குல குவாட் ஹெச்.டி. பிளஸ் ஓலெட் திரை, பாலிஷான அலுமினியம் பிரேமைக் கொண்டது. இதில் வெப்ப உணர் சென்சார், பின்புறம் மேட் கிளாஸ், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இரண்டு மாடல்களில் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 10.5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.
கூகுள் பிக்ஸெல் 8 விலை சுமார் ரூ.75,999.
கூகுள் பிக்ஸெல் 8 புரோ விலை சுமார் ரூ.1,06,999.