< Back
மொபைல்
கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்
மொபைல்

கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
31 March 2023 9:07 PM IST

கிஸ்மோர் நிறுவனம் புதிதாக வோக் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.95 அங்குல திரையைக் கொண்டுள்ளது. அணிந்தால் சுகமான அனுபவத்தைத் தரும் வகையிலான மென்மையான ஸ்டிராப்பைக் கொண்டது. இதில் ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி உள்ளது. விபிட் செயலி மூலம் ஜி.பி..எஸ். செயல்பாடுகளை அறியலாம்.

இதில் உள்ளீடாக உள்ள உணர் சென்சார் உடலியக்க செயல்பாடுகளை துல்லியமாக உணர்த்தும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், தூக்க குறைபாடு உள்ளிட்டவற்றை உணர்த்தும். நீர், தூசி புகாத வகையில் வடிவமைக்கப்பட்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,999.

மேலும் செய்திகள்