< Back
மொபைல்
லெகசி ஸ்மார்ட் கடிகாரம்
மொபைல்

லெகசி ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
6 April 2023 10:00 PM IST

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக லெகசி என்ற பெயரிலான அழகிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.43 அங்குல வட்ட வடிவிலான அமோலெட் திரையைக் கொண்டது.

இதில் 330 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7 நாள்கள் வரை செயல்படும். இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேல் பாகத்தைக் கொண்டுள்ளது. இதனால் துருப்பிடிக்காத தன்மை கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. உள்ளீடாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது.

குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படும். கால்குலேட்டர், செல்போன் இருக்குமிடம் அறிவது, ஸ்மார்ட்போனின் இசை அளவைக் கட்டுப்படுத்துவது, கேமராவை இயக்குவது போன்ற செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.3,799.

மேலும் செய்திகள்