< Back
மொபைல்
பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா
மொபைல்

பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா

தினத்தந்தி
|
31 March 2023 9:27 PM IST

வீட்டில் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பேபோட் நிறுவனம் 360 டிகிரி ஸ்மார்ட் பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

இது 24 மணி நேரமும் செயல்படக்கூடியது. பொருள் அசைவை உடனடியாக உணரும் சென்சார் கொண்டது. 2 வழி ஆடியோ தகவல் தொடர்புக்கு உதவக் கூடியது. இதில் 3 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 360 டிகிரி சுழலும் வகையிலானது.

குறிப்பிட்ட பகுதியை மட்டும் பார்க்க வேண்டுமாயின் அதற்கேற்ப இதன் செயல்பாடுகளை மாற்றியமைக்க முடியும். அசாதாரண நடமாட்டம் இருப்பின் அதுகுறித்து உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை தரும். இரவிலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யும். இதை எளிதாக நிறுவ முடியும். 5 வோல்ட் மின்சாரத்தில் செயல்படக்கூடியது. இதன் நினைவகம் 128 ஜி.பி. கிளவுட் தளத்திலும் பதிவு செய்யும் வசதி கொண்டது.

வெள்ளை, கருப்பு நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,299.

மேலும் செய்திகள்