< Back
மொபைல்
மொபைல்
ஏசர் ஸ்விப்ட் கோ 14 லேப்டாப்
|31 March 2023 7:41 PM IST
ஏசர் நிறுவனம் புதிதாக ஸ்விப்ட் கோ 14 என்ற பெயரில் லேப் டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
மிகவும் மெல்லியதான தன்மை மற்றும் எடை குறைவானதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதன் கீபோர்டின் கீழ் விளக்கு எரியும் வகையிலான வடிவமைப்பைக்கொண்டது. இதில் ஏ.எம்.டி. ரைஸன் 57530 யு பிராசஸர் உள்ளது. இது தொடர்ந்து 9 மணி நேரம் செயல்படும் வகையிலான பேட்டரியைக் கொண்டது.
இதில் 1440 பி வெப் கேமரா உள்ளதால் வீடியோ கான்பரன்ஸ்களை மிகச் சிறப்பாக கையாள முடியும். செயற்கை நுண்ணறிவு இரைச்சல் தவிர்ப்பு நுட்பம் உள்ளதால், வீடியோ அழைப்பு களின்போது இரைச்சலை முற்றிலுமாக தவிர்த்துவிடும். 8 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம் கொண்டது. நினைவகத் திறன் 512 ஜி.பி. ஆகும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. சில்வர் மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.62,990 முதல் ஆரம்பமாகிறது.