< Back
மொபைல்
மொபைல்
ஏசர் நிட்ரோ 5 லேப்டாப்
|31 March 2023 8:38 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் தற்போது நிட்ரோ 5 என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இது வீடியோ கேம் பிரியர்களுக் கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும். இது 15.6 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் ஏ.எம்.டி. ரைஸன் ஹெக்ஸா கோர் பிராசஸர் உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் ரைஸன் 7 கொண்ட ஆக்டாகோர் பிராசஸர் உள்ள மாடலையும் தேர்வு செய்யலாம். 57 வாட்திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி 180 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 2 வாட் திறன் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் எடை 2.5 கிலோ. இதன் விலை சுமார் ரூ.79,990.