< Back
மொபைல்
மொபைல்
ஏசர் ஆண்ட்ராய்ட் டி.வி.
|13 April 2023 5:12 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இது 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் கிடைக்கும். இவை 4-கே ரெசல்யூஷன் கொண்டவை. இதனால் துல்லியமான படக் காட்சிகள் தெரியும். இதில் உள்ள கியூலெட் திரை காட்சிகளின் உண்மைத் தன்மை மாறாமல் வெளிப் படுத்தக் கூடியது.
இதில் பயன்படுத்தப் பட்டுள்ள ஆன்டி கிளேர் தொழில்நுட்பத்தால் காட்சிகள் கண்கூசாத வகையில் வெளிப்படும். டால்பி சரவுண்ட் சிஸ்டம் இனிய இசையை வழங்கும். இதில் 30 வாட் ஸ்பீக்கர், குவாட்கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. 55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.69,999. 65 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.89,999.